Urulai (உருளைக்கிழங்கு)

13.00

Clear

Check

SKU: N/A Category:

உருளைக்கிழங்கு அதிகம் உண்பதால் ஏற்படும் அற்புதமான நன்மைகள் என்ன தெரியுமா?

உலகின் அனைத்து நாட்டு மக்களாலும் விரும்பி உண்ணப்படுகின்றன பிரதான 10 உணவு வகைகளில் உருளைக்கிழங்கு இடம்பெறுகிறது. உருளைக் கிழங்கு பூமிக்கடியில் விளைகின்ற ஒரு கிழங்கு வகை ஆகும். இது தென் அமெரிக்க கண்டத்தை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பயிர்வகை. பிற்காலத்தில் காலனி ஆதிக்க நாட்டின் வியாபாரிகளால் உலகெங்கிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. உருளைக்கிழங்கை நன்கு வேக வைத்து அப்படியே சாப்பிட்டாலே பசியை போக்க வல்ல ஒரு உணவாக இருக்கிறது. இந்த உருளைக்கிழங்கு உலக மக்கள் அனைவரின் வரவேற்பை பெற்ற ஒரு உணவாக இருக்கிறது. உருளைக்கிழங்கை அதிகம் சாப்பிடுவதால் நமக்கு உண்டாகும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

உருளைக்கிழங்கு பயன்கள்
குழந்தைகள் உணவு

அனைத்து வயதினராலும் எளிதாக செரிமானம் செய்யக்கூடிய ஒரு உணவுப் பொருளாக உருளைக்கிழங்கு இருக்கிறது. உருளைக்கிழங்கு என்பது கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு வகையாகும். அதிக சக்தியை அளிக்கக் கூடிய உணவாகவும் அதே நேரத்தில் சுலபமாக செரிமானம் ஆகக்கூடிய ஒரு உணவு வகையாக உருளை கிழங்கு கருதப்படுகிறது. எனவே தான் கடினமான உணவுகளை செரிமானம் செய்ய முடியாத நிலையில் இருக்கும் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு உருளைக்கிழங்கு கொண்டு செய்யப்பட்ட உணவுகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அதே நேரம் ஒரே நாளில் அதிக அளவில் உருளைக்கிழங்கு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் கூறுகின்றனர். காரணம் உருளைக்கிழங்கு அதிகம் சாப்பிடும்போது வாயுத் தொந்தரவுகளை ஏற்படுத்தக்கூடும்.

நார்ச்சத்து

நார்ச்சத்து அதிகம் நிறைந்த ஒரு கிழங்கு வகையாக உருளைக்கிழங்கு இருக்கிறது. அடிக்கடி உருளைக்கிழங்கு சாப்பிடுபவர்களுக்கு அதிலிருக்கும் நார்ச்சத்துக்கள் உடலால்ஏற்றுக் கொள்ளப்பட்டு செரிமான உறுப்புகளின் சீரான இயக்கத்தைத் சரி செய்து, மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் உடலில் ஏற்படுகின்ற குடற்புற்று செல்களின் உற்பத்தி அதிகரிக்காமல் முற்றிலும் தடுக்கிறது. ரத்தத்தில் அதிக அளவு கொலஸ்ட்ரால் படிவதைத் தடுத்து இதய நோய்கள் ஏற்படாமல் காக்கிறது.

முக அழகு கூட

முகம் மற்றும் உடலின் இதர பகுதிகளில் இருக்கும் சருமத்திற்கு பல வகைகளில் பேருதவியாக உருளைக்கிழங்கு இருக்கிறது. உருளைக்கிழங்கை வேக வைத்து, நன்கு பசைபோல் அரைத்து பசும்பாலில் கலந்து, முகத்தில் தடவிக் கொண்டு ஒரு மணி நேரம் கழித்து முகத்தை கழுவினால் முகத்தில் இருக்கின்ற எண்ணெய் பசைகள் நீங்குகிறது. முகப்பருக்கள், கரும்புள்ளிகள் ஏற்படுவதை முற்றிலும் தடுத்து முக அழகை கூட்டுகிறது. முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுத்து இளமைத் தோற்றத்தை அதிகரிக்கிறது. தோல் கடினமாக மாறுவதை தடுத்து ஈரப்பத தன்மையுடனும், மிருதுவாகவும் இருக்குமாறு செய்கிறது.

ரத்த அழுத்தம் தீர

ஊட்டச்சத்து இல்லாத உணவு, மன அழுத்தம், அதிக உடல் எடை, செரிமான கோளாறுகள், நீரிழிவு நோய் ஆகிய அனைத்தும் ரத்த அழுத்த பிரச்சனைக்கு வழி வகை செய்யும் குறைபாடுகளாக இருக்கிறது. உருளைக்கிழங்கில் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது. நார்ச்சத்து ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது. அதேநேரம் பொட்டாசியம் ரத்தத்தில் பிராணவாயு கிரகிக்கும் தன்மையை அதிகரித்து உயர் ரத்த அழுத்தம் போன்ற குறைபாடு ஏற்படாமல் தடுக்கிறது. எனவே ரத்த அழுத்த குறைபாடு இருப்பவர்கள் சீரான அளவில் உருளைக்கிழங்கை சாப்பிட்டு வருவது நலம் பயக்கும் என மருத்துவர்களின் அறிவுரையாக இருக்கிறது.

Kilogram

250g, 500g, 1Kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “Urulai (உருளைக்கிழங்கு)”

Your email address will not be published. Required fields are marked *

More Products Coming Soon

X