Puthina (புதினா இல்லை)

5.0040.00

Clear

Check

SKU: N/A Category:

புதினா கீரை அதிகம் உண்பதால் கிடைக்கும் பலன்கள் என்ன தெரியுமா?

பழங்காலம் தொட்டே பல்வேறு வகையான அற்புத மூலிகைகளைப் உணவுக்காகவும், மருந்தாகவும் நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். அப்படிப்பட்ட ஒரு அற்புதமான மருத்துவ மூலிகை மற்றும் உணவுப் பொருளாக புதினா கீரை இருந்து வந்திருக்கிறது. முற்காலத்தில் ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளில் மட்டுமே அதிகம் உண்ணபட்ட இந்த புதினா இலைகள், தற்போது உலகெங்கிலும் உள்ள மக்களால் புசிக்கப்படுகிறது. ஏராளமான மருத்துவக் குணங்கள் நிறைந்த ஒரு மூலிகை கீரை வகையாக புதினா இருக்கிறது. இந்த புதினாவை தினந்தோறும் சாப்பிடுவதால் மனிதர்களுக்கு ஏற்படும் அற்புதமான நன்மைகள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

புதினா பயன்கள்
ஆஸ்துமா நோய்

ஆஸ்துமா என்பது மனிதர்களின் நுரையீரலை பாதித்து, பல சமயங்களில் மூச்சுக் காற்றை சுவாசிப்பதில் சிரமத்தையும் ஏற்படுத்த கூடிய ஒரு நோயாகும். பரம்பரை காரணமாகவும், ஒவ்வாமை போன்றவற்றாலும் இந்த நோய் ஏற்படுகின்றது. ஆஸ்துமாவிற்கு ரசாயன மருந்துகள் உட்கொண்டாலும், புதினா சிறந்த இயற்கை மருந்தாக இருக்கிறது. புதினாவை பக்குவம் செய்து சாப்பிட்டு வரும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு மூச்சுவிடுவதில் ஏற்படும் சிரமம் குறையும். அதே நேரம் ஒரு சமயத்தில் அளவுக்கதிகமாக புதினாவை ஆஸ்துமா நோயாளிகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

பருவ கால ஒவ்வாமை, ரைனிடிஸ்

உலகெங்கிலும் இருக்கும் மக்களில் பலரையும் பருவகால ஒவ்வாமைகள் பாதிக்கின்றன. அதுபோக ரைனிடிஸ் எனப்படும் சுரமும் அவர்களை பீடிக்கிறது. புதினா இலைகளிலிருந்து பெறப்படும் திரவம் மற்றும் எண்ணெய்கள் போன்றவற்றை இத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டுவர்களுக்கு கொடுத்ததில், அவர்களின் பருவகால ஒவ்வாமை பிரச்சனை வெகுவாக குறைந்திருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். மேலும் ரைனிடிஸ் எனப்படும் ஜுரம் நோயும் வெகு விரைவில் நீங்குவதாகவும் கண்டறிந்துள்ளனர்.

More
Killogram

50g, 100g, 250, 500g

Reviews

There are no reviews yet.

Be the first to review “Puthina (புதினா இல்லை)”

Your email address will not be published. Required fields are marked *

More Products Coming Soon

X