Malli கொத்தமல்லி இல்லை

5.0040.00

Clear

Check

SKU: N/A Category:

கொத்தமல்லி சாப்பிட்டு எத்தனை நோய்களை போக்கலாம் தெரியுமா?

நமது அன்றாட சமையலில் உணவின் ருசியை கூட்டவும், நமது உடல்நலத்தை மேம்படுத்தவும் பல வகையான பொடிகள், கீரைகள் போன்றவற்றை உணவில் சேர்க்கிறோம். அந்த வகையில் அன்றாடம் நாம் சமைக்கின்ற உணவில் சேர்ப்பதை தவிர்க்கவே முடியாத ஒரு உணவு பொருளாக கொத்தமல்லி கீரை இருக்கிறது இந்த கொத்தமல்லி சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

கொத்தமல்லி நன்மைகள்
வயிறு பிரச்சனைகள்

நாம் சாப்பிடும் உணவை சீரணித்து நமக்கு சக்தியை தரும் வயிறு மற்றும் குடல் உறுப்புக்கள் நன்றாக இயங்க கொத்தமல்லி உதவுகிறது. செரிமானத்தை அதிகரிக்கும் கொத்தமல்லியில் நறுமண எண்ணெய் இருப்பதால், பசியை தூண்டி வயிற்றில் செரிமானத்திற்குப் பயன்படும் சுரப்புக்களை அதிகமாக சுரக்க உதவுகிறது. எனவே உடலின் செரிமான சக்தியை அதிகரித்து, செரிமான திறனை மேம்படுத்துகிறது.

சரும நோய்கள்

கொத்தமல்லி இலைகளுக்கு பூஞ்சைகள், நச்சுக்கள் போன்றவற்றை அழிக்கும் நீக்கும் ஆற்றலும், ஆன்டி-செப்டிக் தன்மை அதிகமுண்டு. எனவே சில சரும நோய்களை நீக்குவதில் கொத்தமல்லி சிறப்பாக செயல்படுகிறது. தோல் தடிப்பு, அரிப்பு மற்றும் இதர சருமம் சம்பந்தமான வியாதிகளுக்கு புதிய கொத்தமல்லி இலைகளை அரைத்துத் தேனுடன் கலந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் நன்றாக கழுவினால் தோல் வியாதிகள் விரைவில் குணமாகும்.

கர்ப்பிணி பெண்கள்

கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப கால தொடக்க காலங்களில் வாந்தி, தலைசுற்றல், உடல்சோர்வு போன்றவை ஏற்படுவது இயல்பான ஒன்று தான். இருந்தாலும் இந்த சமயங்களில் தண்ணீரில் ஒரு கப் கொத்தமல்லி இலைகள் மற்றும் ஒரு கப் சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து, குளிர வைத்துக் கர்ப்பிணி பெண்கள் குடித்து வந்தால் அடிக்கடி ஏற்படும் தலைச்சுற்றலும், வாந்தியும் நீங்கும்.

மூக்கிலிருந்து இரத்தம் வடிதல்

ஒரு சிலருக்கு காரணமின்றி அடிக்கடி மூக்கிலிருந்து ரத்தம் வடியும். இதற்கு தீர்வாக 20 கிராம் புதிய கொத்தமல்லி இலைகளை எடுத்துக் கொண்டு, அதனுடன் சிறிது கற்பூரம் சேர்த்து கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து, அந்த சாற்றினை இரத்தம் வரும் நாசித்துவாரத்தில் சொட்டு சொட்டாக விட மூக்கில் வடிகின்ற இரத்தம் உடனே நின்றுவிடும். சில சமயங்களில் இக்கலவையை முகர்ந்து பார்த்தாலே இரத்தம் வடிவது நின்றுவிடும்.

More

Killogram

50g, 100g, 250, 500g

Reviews

There are no reviews yet.

Be the first to review “Malli கொத்தமல்லி இல்லை”

Your email address will not be published. Required fields are marked *

More Products Coming Soon

X